மதம்

மலையோ மழையோ
மரங்களை வேறுபடுத்தி பார்ப்பதில்லை
மதங்களால் மனிதனை வேறுபடுத்தி பார்க்கின்றோம்
மரங்களும் கைகொட்டி சிரிக்கின்றன

மனம் வெளுப்பதற்காக
மலரப்பட்ட மதங்கள்
மதி இழந்த மனிதனின் சுயநலத்தால்
மதிப்பிழந்து போய்விட்டன

பூவுக்கும் யானைக்கும்
என்ன உறவு – பின் ஏன்
மனித பூக்கள்
மதயானைகளின் காலடிகளில்!!

Advertisements